புதுக்கோட்டையில் துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்புபுதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் வந்துள்ளனர். புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள போலீசார் தங்கும் அறையில் தங்கி உள்ளனர்.

இந்த நிலையில் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பு தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு புதுக்கோட்டையில் நேற்று மாலை நடைபெற்றது. 

பழைய பஸ் நிலையம் அருகே இந்த அணிவகுப்பை கலெக்டர் உமாமகேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அணிவகுப்பில் துணை ராணுவ படை வீரர்கள் துப்பாக்கி மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் கம்பீரமாக ஊர்வலமாக சென்றனர். 

இந்த அணிவகுப்பில் போலீசாரும் கலந்து கொண்டனர். அண்ணா சிலை, கீழ ராஜ வீதி, பிருந்தாவனம், பழனியப்பா முக்கம், டவுன் போலீஸ் நிலையம் வழியாக புதிய பஸ் நிலையம் சென்று ஆயுதப்படை திருமண மண்டபத்தை சென்றடைந்தது. 

முன்னதாக அணிவகுப்பு தொடக்கத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments