SDPI கட்சியின் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு கூட்டம்!!!



அறந்தாங்கி  சட்டமன்ற தொகுதியின் தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் நேற்று 02/03/2021 மாலை 5.30 மணியளவில் SDPI கட்சியின் கிருஷ்ணாஜிபட்டினம்  அலுவலகத்தில் நடைப்பெற்றது.

தொடக்கமாக மாவட்ட பொதுச்செயலாளர் Dr.ஹனிபா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, மாவட்ட செயலாளர் PMS.குலாம் முகமது அவர்கள் தலைமை உரையாற்ற,  மாவட்ட பொருளாளர் F.சாலிகு அவர்கள் முன்னிலை வகிக்க, அறந்தாங்கி  சட்டமன்ற தொகுதியின் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு பின்வரும் தீர்மானங்களை நிரைவேற்றினர்.

தீர்மானங்கள்:-

1.அறந்தாங்கி  சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வலிமையான கட்டமைப்புடன் கூடிய கிளைகளும் ஆயிரக்கணக்கான செயல்வீரர்களும்,உறுப்பினர்களும் மற்றும் ஆதரவாளர்களையும் கொண்டு SDPI கட்சி செயல்ப்பட்டு வருகிறது.வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 ல் அறந்தாங்கி  சட்டமன்ற தொகுதியில் SDPI கட்சி போட்டியிட வேண்டும் என மாநில தலைமைக்கு மாவட்டத்தின் சார்பாக பரிந்துரை செய்யப்படுகிறது.

2.அறந்தாங்கி  சட்டமன்ற தொகுதிக்கான SDPI கட்சியின் தேர்தல் பணிக்குழுவின் பின்வரும் பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்,எனவே கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் ஒத்துழைப்பு செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தேர்தல் பணிக்குழு

1. முஹம்மது சாலிஹ்
2. SAM. அரபாத்
3. ஆவுடை சதாம்
4. நஸ்ருதீன்
5. சர்புதீன்
6. குலாம் முஹம்மது
7. இக்பால்
8. சுல்தான் ஆலிம்

3.பூத் முகவர்களுக்கான 2 ஆம் கட்ட பயிற்சி முகாம் வருகின்ற மார்ச் 06 அன்று நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிறைவாக மாவட்ட செயற்க்குழு உறுப்பினர் சேக் இஸ்மாயில் அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார்.

தகவல்:
சமூக ஊடக அணி
SDPI கட்சி
புதுக்கோட்டை கிழக்கு  மாவட்டம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments