அறந்தாங்கி வட்டார வள மையத்தில் நடைபெற்ற ஓவிய திருவிழா போட்டியில் பரிசு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா.!



அறந்தாங்கி வட்டார வளமையத்தின் சார்பில் நடந்த  ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் கேடயம், சான்றிதழ், மெடல் ஆகியவற்றை வழங்கினார்.

அறந்தாங்கி வட்டார வள மையத்தில் நடந்த ஓவிய திருவிழா போட்டியில் பரிசு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி உத்தரவின்படி, அறந்தாங்கி வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் ஓவியத் திருவிழா போட்டி நடைபெற்றது. 

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வீரப்பன் மற்றும் கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஆசிரியர் பயிற்றுனர் ஈஸ்வரன் வரவேற்றார். இறுதியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொ) சிவயோகம் நன்றியுரை கூறினார்.

கோங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ரம்யா முதலிடத்தையும்,

வல்லவாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பிரசீனா இரண்டாம் இடத்தையும்,

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி நிவாஷினி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

மாவட்ட  உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம்,  சான்றிதழ், மெடல் ஆகியவைகளை வழங்கினார்.

ஆசிரியர் பயிற்றுனர் திருமதி நீலவேணி இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

இவ்விழாவில் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள் தலைமை ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் சிறப்பாசிரியர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments