மீமிசல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய அய்யப்பன் அவர்கள் மரணம்புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் அய்யப்பன் (வயது 55). இவர் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும்படையில் பணியில் இருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பணி முடிந்து வீடு திரும்பிய அவருக்கு நேற்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அய்யப்பன் பரிதாபமாக இறந்தார். 

அவருக்கு சுமதி என்ற மனைவியும், கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றும் ராஜேஸ் என்கிற மகனும், ரஞ்சித் என்கிற மகனும், ரம்யா என்ற மகளும் உள்ளனர். இதில் ரம்யாவுக்கு திருமணமாகிவிட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments