புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்டத்தில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது.! 52 பவுன் நகைகள் பறிமுதல்!!புதுக்கோட்டை மாவட்டத்தில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 52 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி மற்றும் சங்கிலி பறிப்பு சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது. இதையடுத்து இந்த சம்பவங்களில் ஈடுபடுவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலகண்ணன் தலைமையில், திருமயம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரித்தனர். இதில் அறந்தாங்கி அருகே திருநாலூர் பகுதியை சேர்ந்த முருகானந்தம் (வயது 19), விஷ்ணு என்கிற மகாவிஷ்ணு (21) என தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 52 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைதான 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல தி்டுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. இதில் அவர்கள் புதுக்கோட்டை மட்டுமில்லாமல் தஞ்சாவூர், சிவகங்கை மாவட்டங்களிலும் தங்களது கைவரிசையை காட்டியது தெரியவந்தது. அங்கும் சங்கிலி பறிப்பு மற்றும் வழிப்பறி என 9 இடங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதையடுத்து 2 பேரையும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின் அறந்தாங்கி கிளை சிறையில் அடைத்தனர். தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 2 பேரை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார். 

மேலும் பல குற்றச்சம்பவங்களை கண்டறிய உதவும் மூன்றாம் கண் எனப்படும் சி.சி.டி.வி. கேமராவை அனைத்து வணிக நிதிநிறுவனங்கள், வங்கிகள், நகைக்கடைகள், அடகுகடைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொருத்தினால் இது போன்ற குற்றசம்பவங்கள் கண்டுபிடிக்கவும், நடந்த குற்றச்சம்பங்களை கண்டுபிடிக்கவும் பெரும் உதவியாக இருக்கும் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments