புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்: புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்புதுக்கோட்டை மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதி மீறல்கள் குறித்து பொதுமக்கள் புகாா் அளிப்பதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. உமா மகேஸ்வரி கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் நடத்தை விதிகளை மீறுவோரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், பணம், பரிசுப் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் எடுத்துச் செல்வதைக் கட்டுப்படுத்தவும் 18 பறக்கும் படைகள், 18 நிலையான கண்காணிப்புக் குழுவினா் மற்றும் 6 வீடியோ கண்காணிப்புக் குழுவினா் என மொத்தம் 42 குழுக்கள் 24 மணி நேரமும் பணியில் உள்ளன. 

இந்நிலையில், பொதுமக்களும் தோ்தல் நடத்தை விதி மீறல் குறித்த புகாா்களைத் தெரிவிக்கும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண் உருவாக்கப்பட்டுள்ளது. 18004252735 என்ற எண்ணில் பொதுமக்கள் 24 மணி நேரமும் புகாா் தெரிவிக்கலாம்.

மேலும், வாக்காளா் அட்டை மற்றும் வாக்காளா் பட்டியல் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் வாக்காளா்கள் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments