ஆவுடையார்கோவில் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைப்புஆவுடையார்கோவில் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் கட்டுப்பாட்டு அறை போலீஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசீலன் தொடங்கி வைத்து பேசும்போது, ஆவுடையார்கோவில் நான்கு ரதவீதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. போலீஸ் நிலையத்தில் இருந்தபடியே அனைத்தையும் பார்த்து கண்காணிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் குற்றசம்பவங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்றார். 

நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் தலைவர் பாண்டியன், செயலாளர் பெரிய முத்து, வர்த்தக சங்க தலைவர் மாணிக்கம் மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள், வர்த்தகர்கள் கலந்துகொண்டனர். முடிவில் ரோட்டரி முன்னாள் தலைவர்அண்ணாத்துரை நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments