அம்மாபட்டினத்தில் நாளை மார்ச்-12ல் தாவூதிய்யா மகளிர் அரபிக்கல்லூரி குர்ஆன் மதரஸா புதிய கட்டிடத் திறப்பு விழா & மலர் வெளியீட்டு விழா அழைப்பிதழ்.!புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா அம்மாபட்டினம் தெற்குத் தெரு தாவூதிய்யா மகளிர் அரபிக்கல்லூரி குர்ஆன் மதரஸா புதிய கட்டிடத் திறப்பு விழா மற்றும் மலர் வெளியீட்டு விழா நாளை வெள்ளிக்கிழமை (12/03/2021) அஸருக்குப் பின் மதரஸா வளாகத்தில் நடைபெற உள்ளது.
 
இந்நிகழ்வில் மௌலானா மௌலவி அல்ஹாபிழ் அல்ஹாஜ்.P.A.காஜா முஹ்யித்தீன் ஆலிம் பாக்கவி ஹழரத் அவர்கள், தலைவர், தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா  சபை பேராசிரியர், உஸ்மானிய்யா அரபிக் கல்லூரி, மேலப்பாளையம்

A.யாஸ்மின் ஆலிமா அவர்கள் ,நிறுவனர் ஒளிமலர்கள் ஆலிமாக்கள் குழு உறுப்பினர் தமிழ்நாடு அரசு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம், இளையான்குடி

ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர். 

தாவூதிய்யா மகளிர் அரபிக்கல்லூரி குர்ஆன் மதரஸா புதிய கட்டிடத் திறப்பு விழா மற்றும் மலர் வெளியீட்டு விழாவிற்கு அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என நிர்வாக சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் ஊரில் இருக்கக்கூடிய பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து தருமாறு தாவூதிய்யா மகளிர் அரபிக்கல்லூரி குர்ஆன் மதரஸா கமிட்டி மற்றும் அம்மாபட்டினம் சமூக நல இளைஞர் பேரவை சார்பாக கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.


தகவல்: VS.முகமது இஸ்மாயில்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments