புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சிபுதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் டெய்சிக்குமார் தலைமை தாங்கினார். துணை கலெக்டர் (பயிற்சி) சுகிதா முன்னிலை வகித்தார். தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளுவது எப்படி?, தேர்தல் நாளன்று கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், வாக்குப்பதிவு தொடர்பான பணிகள் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டன. 

இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகப்பன், தேர்தல் தாசில்தார் கவியரசு மற்றும் மண்டல தேர்தல் அலுவலர்கள் 27 பேர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments