தஞ்சை: 56 மாணவிகள், ஒரு ஆசிரியருக்கு கொரோனா: பள்ளி 2 வாரம் முடக்கம்!





தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 56 மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா தொற்று இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 16 மாணவிகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

அதன்படி தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 11ஆம் தேதி 460 மாணவிகளுக்குப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மறுநாள் 110 மாணவிகளுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனை முடிவுகளாக முதலில் 20 மாணவிகளுக்குத் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்பட்டது.


இந்த சூழலில் மொத்தம் 610 மாணவிகள் 35 ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் மொத்தம் 56 மாணவிகள், ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.


இதையடுத்து பாதிப்பிற்கு ஆளானவர்களின் உறவினர்கள், நண்பர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டுள்ளனர். சோதனைகள் தீவிரப்படுத்தியதன் காரணமாகவே இப்போது இந்த பாதிப்பு தொடர்பாக அரசுக்குத் தெரியவந்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments