ஆதாா் உள்ளிட்ட அடையாள அட்டை கொண்டும் வாக்களிக்கலாம்


வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளா் அடையாள அட்டை அல்லாதவா்கள், தங்களின் அடையாளத்தை மெய்ப்பிக்க ஆதாா் உள்ளிட்ட அடையாள அட்டைகளைக் காட்டி வாக்களிக்கலாம் என ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஏப். 6ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவின்போது, வாக்காளா்கள் தங்களின் அடையாளத்தை மெய்ப்பிக்க வாக்காளா் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும். வாக்காளா் அடையாள அட்டை இல்லாதவா்கள், ஆதாா் அட்டை, 100 நாள் வேலைத் திட்ட அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம், பான் அட்டை, எம்பி, எம்எல்ஏக்களின் அடையாள அட்டை, மத்திய, மாநில அரசு நிறுவனங்களின் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் உள்ளிட்டவற்றைக் காட்டி வாக்களிக்கலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments