முக்கண்ணாமலைப்பட்டியில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுக்கோட்டை மாவட்ட சமூக பாதுகாப்புதுறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு பராமரிப்பு, இளம்வயது திருமணம், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஆற்றுபடுத்துனர் ரமபிரபா பங்கேற்று பேசுகையில், பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான வன்கொடுமைகள் நடப்பதற்கான காரணிகள் மற்றும் சூழ்நிலைகள், அந்த பெண் குழந்தைகளை பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பு அளிப்பதற்கான வழிமுறை குறித்து பேசினார்.

மேலும் பெண் சிசு கொலையை முற்றிலுமாக தடுக்க வேண்டும். சமூகத்தில் குழந்தைகளின் நிலையை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை சமூகம் சார்ந்த பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செயல்படுத்த வேண்டும். குழந்தைகள் சார் பிரச்சினைகளை உடனடியாக 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments