உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.51 ஆயிரம் பறிமுதல்
விராலிமலை சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராமு தலைமையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இராசநாயக்கன்பட்டி சுங்கச்சாவடியில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சென்னையிலிருந்து சுடலைமுத்து (வயது 49) என்பவரது காரை நிறுத்தி சோதனையிடப்பட்டது. அப்போது அந்த காரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.51 ஆயிரத்து 400 பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் நடத்தும் அதிகாரியும், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியருமான தண்டாயுதபாணியிடம் ஒப்படைக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments