கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்: பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்




கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் தீவிரமாக பின்பற்ற வேண்டுமென புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளதாவது: கடந்த டிசம்பர் 2019 முதல் கோவிட்-19 பெருந்தொற்று நோய் உலக அளவில் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கடந்த வருடம் உச்சத்தில் இருந்த கொரோனா நோய்த் தொற்று பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக படிப்படியாக குறைந்த நிலையில் இருந்தது. ஆனால் தற்பொழுது தமிழகத்தில் கோவிட் பெருந்தொற்று இரண்டாம் கட்டமாக வேகமாக பரவி வருகிறது.

இதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும், தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. மேலும், பொதுமக்கள் கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் மற்றும் அதிக கூட்டங்களுக்கு செல்வதினை தவிர்த்தல் ஆகிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்டிகாள்ள அரசு வலியுறுத்தி பொதுமக்களையும் பின்பற்றச்செய்து தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து வருகிறது. தற்போது கொரோனா பெருந்தொற்று நோய் தீவிரமாக பரவுதலைத் தடுக்கும் பொருட்டு, மேற்கண்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், அவற்றை பின்பற்ற தவறும் நிலையில் பொதுமக்களுக்கு தமிழ்நாடு பொதுசுகாதாரச்சட்டம் 1939ன்படி அரசு அபராதம் விதிக்க கடமைப்பட்டுள்ளது. எனவே பொது இடங்களில் முகக்கவசம் அணிய தவறும் பொதுமக்களுக்கு ரூ.200ம், சமூக இடைவெளியினை கடைபிடிக்க தவறும் பொதுமக்களுக்கு ரூ.500ம் அபராதம் விதிக்கப்படும்.

வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் திருமண மண்டபங்கள் போன்ற மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள இடங்களுக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணியாத பட்சத்தில் அந்தந்த நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு ரூ.5,000ம் அபராதம் விதிக்கப்படும். மேலும் அதிக மக்கள் கூடும் இடங்களான தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்களைச் சார்ந்த உரிமையாளர்களும் கோவிட் -19 பெருந்தொற்று நோயிலிருந்து தங்களது பணியாளர்களையும், பொதுமக்களை பாதுகாக்க முழுமையாக கடமைப்பட்டுள்ளார்கள். மேலும், பொதுமக்கள் ஒவ்வொருவரும் கோவிட்-19 பெருந்தொற்று நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments