ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.75 ஆயிரம் பறிமுதல்
விராலிமலை சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும்படை அதிகாரி பூங்காவனம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் உள்ளிட்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நம்மம்பட்டியில் ஒரு சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் மணப்பாறையை சேர்ந்த ரமணி என்பவர் ரூ.75 ஆயிரத்து 660 கொண்டு வந்ததார். ஆனால் அதற்கு எந்தவித ஆவணங்களும் இல்லை. இதனையடுத்து பறக்கும்படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான தண்டாயுதபாணியிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments