அறந்தாங்கி பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது; 10 கிலோ பறிமுதல்!அறந்தாங்கி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக அறந்தாங்கி போலீசாருக்கு புகார் வந்தது.

இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த முருகன் (வயது 62) என்பவரது வீட்டில், சோதனை நடத்தியபோது, 5 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து அதை போலீசார் பறிமுதல் செய்து முருகனை கைது செய்தனர். இதேபோல் நாகுடி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த அறந்தாங்கி எல்.என் -புரம் பகுதியைச் சேர்ந்த ராமநாதன் மற்றும் இக்பால் ஆகிய இருவரை பிடித்து விசாரித்த போது, 5 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு எடுத்து சென்றது தெரிய வந்தது. 

இதையடுத்து இருவரையும் கைது செய்னர். 3 பேரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments