புதுக்கோட்டையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காததால் ரூ.12 ஆயிரம் அபராதம்!கொரோனா தொற்று பரவலை தடுக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஜீவசுப்பிரமணியன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, முககவசம் அணியாத, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத ஒருவணிக நிறுவனம், 2 பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments