புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை கலெக்டர் உமாமகேஸ்வரி ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் புதுக்கோட்டை தாசில்தார் அலுவலக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான உமாமகேஸ்வரி நேற்று திடீரென ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் 1,902 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வழங்கும் வகையில் கணினியின் மூலம் முதல் கட்ட சுழற்சி முறையில் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் பிரித்து வழங்கும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் கடந்த 10-ந் தேதி நடைபெற்றது.
இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சம்பந்தப்பட்ட தொகுதிக்குட்பட்ட கந்தர்வகோட்டை, இலுப்பூர், புதுக்கோட்டை, திருமயம் மற்றும் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகங்களிலும், அறந்தாங்கி சப்-கலெக்டர் அலுவலகத்திலும் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திர பாதுகாப்பு அறையில் கண்காணிப்பு கேமராகள், 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார், தீயணைப்பான்கள், கண்காணிப்பு பதிவேடுகள் உள்ளிட்ட பல்வேறு உயர் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு்ள்ளது.
இந்த அறைகள் இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது இதுபோன்ற திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திர பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன், வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், தாசில்தார் முருகப்பன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.