புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 157 வேட்பு மனுக்கள் தாக்கல்! அறந்தாங்கி தொகுதியில் 33 வேட்பு மனுக்கள் தாக்கல்!!



புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் இதுவரை 157 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. கடைசி நாளான நேற்று மதியம் 3 மணியுடன் வேட்புமனுக்கள் பெறுவது நிறைவடைந்தது.

கடைசி நாளான நேற்று புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் அ.தி.மு.க வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் மேலும் ஒரு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இது தவிர சுயேச்சையாக ராஜசேகர், வீரையா, ஆர்.கார்த்திகேயன், எஸ்.கார்த்திகேயன், முத்துக்குமார், ரஜினிகாந்த், சாகுல்அமீது, குமார், அப்துல்லா ஆகிய 9 பேர் தேர்தல் நடத்தும் அதிகாரி டெய்சிகுமாரிடம் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு இதுவரை 26 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

விராலிமலை சட்டமன்ற தொகுதியில் நேற்று எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் மதியழகு, மை இந்தியா பார்ட்டி செந்தில்குமார், நாம் தமிழர்கட்சி மாற்று வேட்பாளர் ஜெயந்திராணி, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் கார்த்திக்பிரபாகரன், சுயேச்சைகளாக ரமேஷ்குமார், மணிகண்டன், தனலெட்சுமி, பாலசுப்பிரமணியன், பாண்டீஸ்வரி, ராஜவர்மன், திருவேந்திரன், ஜோதிவேல், பழனிச்சாமி, அப்துல்நாசர், சையதுமுகமது ஆகிய 15 பேர் தங்களது வேட்பு மனுக்களை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தண்டாயுதபாணியிடம் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இதுவரை விராலிமலை சட்டமன்ற தொகுதியில் 34 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இதில் 29 பேர் ஆண்கள், 5 பேர் பெண்கள் ஆவர்.

திருமயம் சட்டமன்ற தொகுதியில் நேற்று தி.மு.க. வேட்பாளர் ரகுபதி கட்சி பொறுப்பாளர்களுடன் ஊர்வலமாக வந்து 2 வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி கிருஷ்ணனிடம் வழங்கினார். இவருக்கு மாற்று வேட்பாளராக சரோஜா மனு தாக்கல் செய்தார். இதேபோல் சுயேச்சை வேட்பாளர்களாக துரைராஜன், சுந்தரம், மணிகண்டன், முத்து அடைக்கலம், மதியழகன், கார்த்திக், கே.செல்வகுமார், எம்.செல்வகுமார், எஸ்.செல்வகுமார், எம்.செல்வகுமார், எம்.செல்வகுமார், கே.செல்வகுமார் ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர். கடைசிநாளான நேற்று ஒரே நாளில் 15 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை இத்தொகுதியில் 27 பேர் மனுதாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செல்வகுமார் பெயரில் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

கந்தர்வகோட்டை (தனி) சட்டமன்றத் தொகுதியில் கடைசிநாளான நேற்று சுயேச்சை வேட்பாளர்கள் அதிக அளவில் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். நேற்று ஒரே நாளில் 8 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது வரை மனுதாக்கல் செய்தவர்கள் விவரம் வருமாறு:- நாம்தமிழர் கட்சி சார்பில் கறம்பக்குடி ரமிலா மோகன்ராஜ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கந்தர்வகோட்டை லெனின் பழனியாண்டி, சி.பி.ஐ. எம்.எல் கட்சி சார்பில் சங்கம் விடுதி ஆசைத்தம்பி, அ.தி.மு.க.சார்பில் தீர்த்தான் விடுதி ஜெயபாரதி, மாற்று வேட்பாளராக உதயகுமார், தி.மு.க.கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சின்னதுரை, மக்கள் நீதிமய்யம் கூட்டணியின் ஆதிதிராவிடர் மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் ஆதிதிராவிடர், சுயேச்சைகளாக தன்ராஜ், அமிர்தம், ரத்தினம், கார்த்திகேயன், அன்பழகன், சின்னப்பா, ரங்கசாமி, மணிமுத்து, இளையராஜா, மலர்விழி உள்ளிட்ட 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு்ள்ளது.

ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் கடைசிநாளான நேற்று தி.மு.க.வேட்பாளர் சிவ.வீ.மெய்யநாதன், மாற்றுவேட்பாளராக சுமதி, மைஇந்தியா பார்ட்டி சார்பில் பாலமுருகன், அ.தி.மு.க. சார்பில் புஷ்பராஜ், சுயேச்சைகளாக கண்ணதாசன், விநாயகமூர்த்தி, நதியான், முரளி ஆகியோர் தங்களது வேட்பு மனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலர் அக்பர் அலியிடம் தாக்கல் செய்தனர். இதுவரை இத்தொகுதியில் 19 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் கடைசி நாளான நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிவசண்முகம், நாம்தமிழர் கட்சி சார்பில் ஹுமாயூன் கபீர், காங்கிரஸ் சார்பில் ராமசந்திரன், மாற்று வேட்பாளராக அன்பு, மைஇந்தியா பார்ட்டி சார்பில் குமரப்பன், அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம் சார்பில் ராமலிங்கசாமி ஆதித்தன், புதிய தமிழகம் கட்சி சார்பில் அமலாதாஸ், மாற்று வேட்பாளராக தமிழரசன், சுயேச்சைகளாக சையது சுல்தான் இப்ராஹிம், முத்துசெல்வம், அர்ஜுனன், பாண்டியன், தில்லைநாதன், சிவக்குமார், தட்சணாமூர்த்தி, ஜெகதீசன், ராமசாமி, முத்துகருப்பையா, செல்வகுமார், கனகராஜ் உள்ளிட்ட 21 பேர் வேப்புமனு தாக்கல் செய்தனர். இதில் ராமச்சந்திரன் 2 மனுக்கள் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரைக்கு மொத்தம் 33 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் 157 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்புமனு பரிசீலனை இன்று 20-ந் தேதி நடைபெறுகிறது. அதை தொடாந்து 22-ந் தேதி வேட்புமனு திரும்பப்பெற கடைசிநாளாகும் அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments