கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் டீசல் விலை உயர்வை கண்டித்து மீனவர்கள் விசைப்படகுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்!டீசல் விலைஉயர்வை கண்டித்து மீனவர்கள் விசைப்படகுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு மீனவர் கூட்டமைப்பு சார்பாக மாநில ஆலோசனைக் கூட்டம் கடந்த 6-ந்தேதி பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச் செயலாளர் தாஜுதீன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ராமேசுவரம் முதல் நாகப்பட்டினம் வரை உள்ள மீனவ சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், டீசல் விலைஉயர்வால் மிகப்பெரிய அளவில் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே டீசல் மீது விதிக்கப்படும் அனைத்து வரிகளும் நீக்கம் செய்து உற்பத்தி விலைக்கு டீசல் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் அந்த கூட்டத்தில் 19-ந்தேதி ராமேசுவரம் முதல் நாகப்பட்டினம் வரை உள்ள விசைப்படகுகளில் கருப்பு கொடி கட்டி ஒரு நாள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி நேற்று புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள விசைப்படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் போராட்டம் நடத்தினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments