அன்னவாசலில் 3 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!!அன்னவாசல் வேளார்தெருவை சேர்ந்தவர் மூக்கன் இவரது மகன் ஆறுமுகம் (வயது 20). இவருக்கும் அன்னவாசல் கலைஞர் காலனியை சேர்ந்த பாலமுருகன் உள்பட 6 பேருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்னவாசல் விருத்தபுரீஸ்வரர் கோவில் திருவிழாவில் பிரச்சினை ஏற்பட்டது.

இதில் பாலமுருகன் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து ஆறுமுகத்தை தாக்கினர். இதில் ஆறுமுகம் படுகாயம் அடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் பாலமுருகன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் நேற்று அன்னவாசல் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (24), விஜய் (21), கருப்பையா (24) ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். 

இதனையடுத்து கலெக்டர் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில், குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையின் நகல் திருச்சி மத்திய சிறையில் உள்ள அவர்களிடம் வழங்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments