அகில உலக அதிரை சமூக ஆர்வலர்கள் சார்பில் (19.03.21) மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்ட மன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MA., MLA., அவர்களுக்கு பாராட்டு விழா J.அப்துல் கபூர் (மரைக்கான் USA) தலைமையில் நடைபெற்றது.
இதில் கல்லுக் கொள்ளை சாவன்னா, ஷாதலி , மலேஷிய பாக்கர் உள்ளிட்டோர் அதிரையில் உள்ள ஜமாத்துகள், சங்கங்கள் உள்ளிட்ட சகல தரப்பையும் ஒருங்கிணைத்து பெரும் கூட்டத்தை திரட்டியிருந்தனர்.
இந்தியாவின் இளம் சட்டமன்ற உறுப்பினர் விருது பெற்று நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பதவியா? கொள்கையா? என்ற நிலையில் கொள்ளையே பெரிது என தியாக பூர்வமாக முடிவு எடுத்ததைப் பாராட்டியும் மு.தமிமுன் அன்சாரி அவர்களை பாராட்டி கவுரவித்து பாராட்டு பேழை வழங்கினர்.
இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி அவர்களும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் சதா சிவக்குமார் அவர்களும், டாக்டர் M.அஷ்ரப் அலி MD (Alternative) அவர்களும், கடற்கரை தெரு ஜூம்ஆ பள்ளிவாசல் இமாம் மௌளானா மௌலவி M.G. சபியுல்லாஹ் அன்வாரி அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.
அகில உலக அதிரை சமூக ஆர்வலர்கள் சார்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயளாலர் மு.தமிமுன் அன்சாரி MA MLA அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு பேழை வழங்கிய பின் ஏற்புரை நிகழ்த்தினார்.
இந்த பாராட்டுகள் அனைத்தையும் கட்சியினரின் கரங்களில் ஒப்படைப்பதாகவும், இந்த முடிவில் ஒத்துழைத்த கட்சியினரின் ஈறுலக வாழ்வுக்கு பிரார்த்திப்பதாகவும் கூறினார்.
விழா மேடைக்கு வருகை தந்த பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் கா.அண்ணாதுரை அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.
இறுதியாக மஜக நகர செயலாளர் அப்துல் சமது அவர்கள் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சியை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து தந்த அகில உலக அதிரை சமூக ஆர்வலர்கள் , தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை சேக், மாவட்ட துணைச் செயலாளர் மதுக்கூர் சாகுல்ஹமீது, நகர பொருளாளர் அஷ்ரப் அலி, நகர துணைச் செயலாளர்கள் அஸ்கர், மர்ஜூக், நகர மருத்துவ அணி செயலாளர் பயாஸ், நகர இளைஞர் அணி செயலாளர் ஹக் மற்றும் மனிதநேய சொந்தங்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.