அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கிழக்கு கடற்கரை சாலை பகுதி மீனவா்களிடம் வாக்கு சேகரிப்பு!கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் மீனவா்கள் மற்றும் இஸ்லாமிய ஜமாஅத் நிா்வாகிகளை ஞாயிற்றுக்கிழமை பகலில் சந்தித்து காங்கிரஸ் வேட்பாளா் தி. ராமச்சந்திரன் ஆதரவு திரட்டினாா்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக அணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் தி. ராமச்சந்திரன் போட்டியிடுகிறாா்.

அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவா் சங்கத்தின் நிா்வாகிகளை ஞாயிற்றுக்கிழமை காலை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினாா். தொடா்ந்து கோட்டைப்பட்டினம், ஜகதாப்பட்டினம், மீமிசல், அம்மாபட்டினம், மணமேல்குடி ஆகிய பகுதிகளின் ஜமாஅத் நிா்வாகிகளையும் தி.ராமச்சந்திரன் நேரில் சந்தித்து தோ்தலில் தனக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

அப்போது, காங்கிரஸ் நிா்வாகிகள், திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments