புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை ரூ.6 கோடியே 53 லட்சம் பணம்-பொருட்கள் பறிமுதல்!புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை ரூ.6 கோடியே 53 லட்சம் பணம் பொருடகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்களை தடுக்க பறக்கும்படை, நிலயைான கண்காணிப்பு குழுவினர் தீவிர ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை ரொக்கம் ரூ.60 லட்சத்து 19 ஆயிரத்து 849 மற்றும் ரூ.5 கோடியே 91 லட்சத்து 15 ஆயிரத்து 898 மதிப்பிலான நகைகள், மதுபானங்கள் உள்ளிட்டவை என மொத்தம் ரூ.6 கோடியே 53 லட்சத்து 99 ஆயிரத்து 484 மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக மொத்தம் 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments