நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி 7-வது வார்டில் அடிப்படை தேவைகளை செய்து தரக்கோரி மனு அளித்த 7-வது வார்டு உறுப்பினர் சாதிக் பாட்ஷா.!நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி 7-வது வார்டில் அடிப்படை தேவைகளை செய்து தரக்கோரி ஊராட்சி மன்ற செயலாளரிடம் மனு அளித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி 7-வது வார்டில் பல மாதங்களாக எரியாத தெருவிளக்கு மற்றும் அடிப்படை தேவையான குடிநீர் வசதி செய்து தர வேண்டி 15.03.2021 அன்று ஊராட்சி செயலாளரிடம் மனு அளித்தார். ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் இல்லாத காரணத்தால் ஊராட்சி மன்ற செயலாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது கடந்த 4-5-ந்து மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை. இது சம்மந்தமாக பலமுறை தொலைபேசி மற்றும் நேரடியாக தெரிவித்தும் மற்றும் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்திலும் தெரிவித்துள்ளேன். இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் அன்றட அடிப்படை தேவையான குடிதண்ணீர் வசதி இல்லாமலும் மிகுந்த சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே குடிநீர் இணைப்பு இல்லாதவர்களுக்கு உடனே செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

தகவல்:சாதிக் பாட்ஷா, 7-வது வார்டு உறுப்பினர், கோபாலப்பட்டிணம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments