புதுக்கோட்டை மாவட்டத்தில் சந்தேகத்துக்கிடமான பரிவா்த்தனை தகவல்களை தர வங்கி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்...சந்தேகத்துக்கு இடமான பணப்பரிவா்த்தனைகளை வங்கியாளா்கள் உடனே மாவட்ட நிா்வாகத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரும் மாவட்டத் தோ்தல் அலுவலருமான பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.

தினந்தோறும் வங்கி பண பரிவர்த்தனைகளை வங்கியாளர்கள் கண்காணிக்க வேண்டும். கடந்த இரண்டு மாதங்களாக எந்தவிதமான பண பரிவர்த்தனையும் செய்யாத வங்கிக்கணக்கில் தற்போது பணப்பரிவர்த்தனை நடைபெற்றால் உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு  தகவல் தெரிவிக்க வேண்டும்.... வங்கியாளர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் இந்த தருணத்தில் வங்கியாளர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும என்பது குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான  உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. 

இதில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கி அதிகாரிகள் முன்னோடி வங்கி அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் தேர்தலை நடத்துவதற்கு முக்கிய பங்கு வங்கியாளர்கள் உள்ளது. குறிப்பாக இந்த தருணத்தில் தினந்தோறும் வங்கிகளில் நடக்கும் பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்க வேண்டும். 

குறிப்பாக தினந்தோறும் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் பண பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களை கண்காணிக்க வேண்டும். மேலும் கடந்த இரண்டு மாத காலமாக எந்த விதமான பண பரிவர்த்தனையும் செய்யாத வங்கிக்கணக்கில் தற்போது பண பரிவர்த்தனைகள் நடைபெற்றால் உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு  தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். இதன் பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆட்சியர் உமாமகேஸ்வரி திறந்துவைத்தார்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments