அறந்தாங்கியில் வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி



அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்துக் கட்சி கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு உதவி கலெக்டர் ஆனந்த் மோகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அனைத்து கட்சியினருக்கும் சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. மேலும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து அறந்தாங்கி பஸ் நிலையம் வரையில் வாக்காளர் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது. 

இதில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் வருவாய் ஆய்வாளர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து தேர்தல் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments