புதுக்கோட்டையில் வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் உள்ளதா மாவட்ட ஆட்சியர் ஆய்வு.!சட்டமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,902 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் மச்சுவாடி அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி, காமராஜபுரம் நகராட்சி தொடக்கப்பள்ளி, போஸ்நகர் நகராட்சி தொடக்கப்பள்ளி, கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான உமாமகேஸ்வரி நேற்று ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிநீர் வசதி, மின் விளக்கு வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் சாய்தள வசதி உள்ளிட்டவைகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் வாக்குப்பதிவின்போது வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் தேவையான அனைத்து வசதிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். 

அதன்பின் புதுக்கோட்டை கட்டியாவயல் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வாகன சோதனை பணியினை அவர் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலட்சுமி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜீவாசுப்பிரமணியன், தாசில்தார் முருகப்பன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments