காசிம்புதுப்பேட்டையில் `ஓட்டுக்கு வேண்டாம் நோட்டு' பதாகை வைத்த கிராம மக்கள்!கீரமங்கலம் காசிம்புதுப்பேட்டையில் `ஓட்டுக்கு வேண்டாம் நோட்டு' என்ற வாசகத்துடன் கிராம பொதுமக்கள் பதாகை வைத்துள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கீரமங்கலம் காசிம்புதுப்பேட்டையில் கிராமப் பொது மக்கள் சார்பில் நேற்று முன்தினம் இரவு ஒரு பதாகை வைத்தனர். அதில் `ஓட்டுக்கு வேண்டாம் நோட்டு' ஜனநாயக கடமையாற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறும் போது, நமது ஜனநாயக கடமையை செய்ய பணம் வாங்க கூடாது. இது பெரிய பாவம். அதனால் தான் எங்கள் பகுதிக்கு வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்களிடம் எங்கள் பகுதியின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறோம். 

இதே போல ஒவ்வொரு வாக்காளரும் பணம் வாங்காமல் வாக்களித்தால் வெற்றி பெறும் வேட்பாளர்களிடம் தங்கள் கிராம கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்த முடியும். யாரும் வாக்களிக்க பணம் வாங்க வேண்டாம் என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments