கோட்டைப்பட்டினம் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்கோட்டைப்பட்டினம் தெற்கு தெரு கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கரை ஒதுங்கியது. இதனை பார்த்த அப்பகுதி மீனவர்கள் கோட்டைப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் விவேக் மற்றும் கிராம உதவியாளர் இளையராஜா ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். 

அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் கடலோர காவல் குழும போலீசார் மற்றும் மீன்வளத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்?, கடலில் தவறிவிழுந்து இறந்தாரா? அல்லது யாராவது கொலை செய்து பிணத்தை கடலில் வீசி சென்றனரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments