புதுக்கோட்டையில் துணை ராணுவத்தினர், காவல் துறையினர் கொடி அணிவகுப்பு
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, புதுக்கோட்டையில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க துணை ராணுவப் படையினர் மற்றும் மாவட்ட காவல்துறையினர் நடத்திய கொடி அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார் புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி புதுக்கோட்டை நகரின் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான பழைய பேருந்து நிலையம், அண்ணா சாலை வழியாக கீழராஜவீதி, பிருந்தாவனம், மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி வழியாக சென்று ஆயுதப்படை மைதானத்தில் நிறைவு பெற்றது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments