புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள எழில்மிகு கடற்கரை கிராமம் கோபாலப்பட்டிணம் ஆகும்.
கோபாலப்பட்டிணம் மக்களின் நீண்டநாள் கோரிக்ககளை வேட்பாளர்கள் வாக்குறுதி அளிப்பார்களா என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கோபாலப்பட்டிணம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள்:
- கோபாலப்பட்டிணத்தை தனி ஊராட்சியாக பிரிக்க வழிவகை செய்ய வேண்டும்.
- கோபாலப்பட்டிணத்தில் மின் பற்றாக்குறையை சரி செய்ய புதிய டிரான்ஸ்பர்மர் (மின்மாற்றி) அமைத்து தர வேண்டும்.
- கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைபள்ளியின் கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் மேலும் மாணவ,மாணவிகளுக்கு தனித்தனி கழிப்பறை கட்டிடம் கட்டி தர வேண்டும்.
- அறந்தாங்கியில் இருந்து மீமிசல் வழியாக கோபாலப்பட்டிணத்திற்கு தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் வந்து சென்ற அரசு பேருந்து நிறுத்தப்பட்டதை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் கோபலாப்பட்டிணம் பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைத்து தர வேண்டும்.
- கோபாலப்பட்டிணம் மக்களின் நீண்ட நாள் பிரதான கோரிக்கையாக இருந்து வருவது மழைக்காலங்களில் அவுலியா நகர் பகுதி கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வான வடிகால் வாய்க்கால் அமைத்து தர வேண்டும்.
- கோபாலப்பட்டிணத்தில் ஒரு இடத்தில் 30 வருடத்திற்கு மேல் பட்டா இல்லாமல் இருந்து வருவோறுக்கு இலவச பட்டா வழங்க வழிவகை செய்ய வேண்டும்.
- கோபாலப்பட்டிணத்திற்கு காவேரி கூட்டு குடிநீர் வசதி கொண்டு வர வேண்டும்.
- கோபாலப்பட்டிணத்திற்கு துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பட வேண்டும்.
- கோபாலப்பட்டிணத்தில் பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டு சேதமடைந்துள்ள சாலைகள் அனைத்தும் புதிய சாலை அமைத்து தர வேண்டும்.
- கோபாலப்பட்டிணத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைத்து தர வேண்டும்.
- கோபாலப்பட்டிணத்தில் கடற்கரையில் சிறுவர்களுக்கான பூங்கா அமைக்க தர வேண்டும்.
- கோபாலப்பட்டிணத்தில் முக்கிய இடங்களுக்கு ஹாலஜன் லைட் அமைத்து தர வேண்டும்.
- கோபாலப்பட்டிணத்தில் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
- மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்.
- ஆவுடையார்கோவில் தாலுகா/ஒன்றியத்தில் மீமிசலை தனி ஒன்றியமாக பிரிக்க வேண்டும்.
- மீமிசலில் அனைத்து விதமான வங்கி பரிவர்த்தணைகளுக்கான வசதிகளை ஏற்படுத்தவேண்டும்.
- மீமிசலில் எல்லா வசதிகளுடன் நவீன மருத்துவமனைகள் 24 மணிநேர சேவையில் இருக்குமாறு அமைத்து தர வேண்டும்.
- கோபாலப்பட்டிணத்தில் இருக்க கூடிய தகுதி உள்ள முதியவர்களுக்கு முதியோர் உதவி தொகையை அரசிடம் இருந்து பெற்று தர வேண்டும்.
- கோபாலப்பட்டிணத்தில் உள்ள குளங்களை சுற்றி பனை, தென்னை போன்ற மரங்களை நட வேண்டும்.
- அரசு தொடக்கப்பள்ளியின் சுற்று சுவர் அமைத்து தர வேண்டும்.
- கோபாலப்பட்டினத்தில் இருக்க கூடிய பால்வாடி மையங்களில் மின் இணைப்பு செய்து மற்றும் விளையாட்டு உபகர்ணங்கள், குழந்தைகள் அடிப்படை கல்வி கற்க போதுமான உபகர்ணங்கள் கிடைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும்.
இதுபோன்ற எண்ணற்ற கோரிக்கைகளை வேட்பாளர்கள் நிறைவேற்ற வாக்குறுதி அளிப்பார்களா, வெற்றி பெற்றால் வாக்குறுதியை நிறைவேற்றுவார்களா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
அறந்தாங்கி தொகுதியின் வேட்பாளர்களாக 1.ராஜநாயகம் (அ.தி.மு.க.), 2.ராமசந்திரன் (காங்கிரஸ்), 3.ஜுவா (பகுஜன் சமாஜ் கட்சி), 4.அமலதாஸ் சந்தியாகு (புதிய தமிழகம்), 5.ராமலிங்கசாமிஆதித்தன் (அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி), 6.குமரப்பன் (மை இந்தியா பார்ட்டி), 7.சக்திவேல் (தமிழக முற்போக்கு மக்கள் கட்சி), 8.சிவசண்முகம் (அ.ம.மு.க.), 9.சேக் முகமது (மக்கள் நீதி மய்யம்), 10.ஹீமாயுன்கபீர் (நாம் தமிழர் கட்சி), 11.அர்ச்சுணன் (சுயே), 12.சையது சுல்தான் இப்ராஹிம் (சுயே), 13.செல்வகுமார் (சுயே), 14.தில்லைநாதன் (சுயே), 15.தெட்சிணாமூர்த்தி (சுயே), 16.பாண்டியன் (சுயே), 17.மகேந்திரன் (சுயே), 18.முத்துகருப்பையா (சுயே), 19.முத்துசெல்வம் (சுயே), 20.ராமசாமி (சுயே), 21.வேல்ராஜ் (சுயே), 22.ஜெகதீசன் (சுயே) மொத்தம் 22 பேர் போட்டிக் களத்தில் உள்ளனர்.
இதில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் ஹீமாயுன்கபீர் அவர்கள் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: GPM மீடியா அட்மின் குழு, கோபாலப்பட்டிணம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.