அறந்தாங்கி நகராட்சி 26-வது வார்டில் சாலை சீரமைக்கப்படாததால் தேர்தலை புறக்கணிக்க வார்டு மக்கள் முடிவு!அறந்தாங்கி நகராட்சி 26-வது வார்டில் சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக, அப்பகுதி மக்கள் பதாகை வைத்துள்ளனர்.

அறந்தாங்கி நகராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல வார்டுகளில் சேதமான சாலைகள் சீரமைக்கப்பட்டது. ஆனால் 26-வது வார்டில் உள்ள சாலை சீரமைக்கப்படவில்லை.

இதனால் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. வார்டு பகுதி மக்கள், அந்த சாலையில் சென்றுவர கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

மேலும், இந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் நேற்று அப்பகுதி மக்கள் 26-வது வார்டில் சாலை சீரமைக்கப்படாவிட்டால் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போகிறோம் என பதாகை வைத்துள்ளனர்.
இது குறித்து ஆய்வு மேற்கொண்ட நகராட்சி (பொறுப்பு) ஆணையர் அய்யனார் தேர்தல் முடிந்த பிறகு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments