ஆவுடையார்கோவிலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்!ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தின்போது, நூறு சதவீதம் வாக்கு நமது இலக்கு என அச்சிடப்பட்ட ஆயிரம் முககவசம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

ஊர்வலம் ஆவுடையார்கோவில் 4 வீதிகளில் சென்று மீண்டும் பள்ளி வந்து நிறைவடைந்தது. ஊர்வலத்துக்கு அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் திராவிட செல்வம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் தாமரைச் செல்வன் வரவேற்றார். 

அறந்தாங்கி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி ஆனந்த மோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பொதுமக்களுக்கு முககவசம் வழங்கினார். 

இதில் தாசில்தார் சிவக்குமார், தனித்தாசில்தார் சூர்ய பிரபு, துணை தாசில்தார் ஜபருல்லா, உதவி தலைமை ஆசிரியர் ஸ்டாலின் மற்றும் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் குமார் நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments