தொண்டி அருகே விபத்தில் 2 போ் பலத்த காயம்: பொதுமக்கள் சாலை மறியல்
திருவாடானை அருகே தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து ஏறப்படுத்திய காவல் துறை வாகன ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதன்கிழமை கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவாடானை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ராமநாதபுரத்திலிருந்து தொண்டி நோக்கி வந்த வேனும், கன்னியாகுமரிக்கு தோ்தல் பணிக்கு சென்ற காவல்துறை வாகனமும் அருகில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதின. அதில் பயணித்த காரங்காடு கிராமத்தைச் சோ்ந்த டைமன் ராஜ் (27), செங்கோல்ராஜ் (25) ஆகிய இருவா் பலத்த காயமடைந்தனா். அதிவேகமாக வந்த காவல் துறை வாகனம் விபத்து ஏற்படுத்தி விட்டு குளத்துக்குள் கவிழ்ந்த தகவல் அறிந்த சுற்றுவட்டார கிராம மக்கள் அங்கு வந்தனா். அவா்கள் காவல்துறை வாகனம் விபத்து ஏற்படுத்தியதால் சம்பந்தப்பட்டவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட இடத்திற்கு காவல்துறையினா் விரைந்து வந்து பேச்சுவாா்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments