புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல் புகார் தெரிவிக்கலாம் தேர்தல் அலுவலர் அழைப்பு
புதுக்கோட்டையில் தேர்தல் நடத்தை விதிமுறை குறித்த புகார்களை பொதுமக்கள் தெரிவி–்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி (தனி), விராலிமலை சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பொது பார்வையாளராக ரகு, தேர்தல் செலவின பார்வையாளராக மண்டல் செயல்படுகின்றனர்.

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, திருமயம் சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பொது பார்வையாளராக கோவித்தராஜ், தேர்தல் செலவின பார்வையாளராக தினேஷ்குமார், ஆலங்குடி சட்டமன்ற தொகுதி மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பொது பார்வையாளராக அனிமேஷ் தாஸ், தேர்தல் செலவின பார்வையாளராக கார்னிடான் செயல்படுகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் காவல் பார்வையாளராக மட்டா ரவி கிரன் செயல்படுகிறார். இவர்களிடம் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.அதன்படி கந்தர்வகோட்டை, விராலிமலை தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ரகு- 9442937961, புதுக்கோட்டை, திருமயம் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் கோவிந்த ராஜ்- 9442937962, ஆலங்குடி, அறந்தாங்கி தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அனிமேஷ் தாஸ் -9080081469 என்ற செல்போன் எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments