வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் - சாட் பாக்சில் வரவுள்ள சிறப்பம்சம் என்ன தெரியுமா?
வாட்ஸ்அப் சாட் பாக்சில் (Whats app Chat box) கலர் மாற்றும் வசதி மற்றும் வாய்ஸ் மெசேஜை ஸ்பீடு செய்து கேட்கும் ஆப்சன்கள் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம், யூசர்களை திருப்திப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய அப்டேட்களை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் புதிதாக சில ஆப்சன்களை கொடுக்கும் வகையில் சில மாற்றங்களை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வாடிக்கையாளர்கள் தங்கள் வாட்ஸ்அப் சாட் பாக்சில் இருக்கும் வண்ணங்களை தங்களுக்கு பிடித்த நிறத்தில் மாற்றிக்கொள்ளும் ஆப்சன் புதிதாக சேர்க்கப்பட உள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனத்தின் அப்டேட் மற்றும் செய்திகளை முன்கூட்டியே வெளியிடும் WABetaInfo நிறுவனம், தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்த புதிய அப்டேட்டை தெரிவித்துள்ளது. மேலும், வாட்ஸ்அப் சாட்பாக்சில் டைப் செய்யும் எழுத்துகளுக்கு கூடுதலாக அடர் பச்சை நிற ஷேட் - ஐ தேர்வு செய்துகொள்ளும் வசதியும் கொடுக்கப்பட உள்ளதாக கூறியுள்ளது. விரைவில் இந்த புதிய அப்டேட்களை வெளியிட வாட்ஸ்அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக WABetaInfo தெரிவித்துள்ளது. ஆனால், வாட்ஸ்அப் தரப்பில் அதிகாரப்பூர்வமாக இந்த அப்டேட்டுகளை கன்பார்ம் செய்யப்படவில்லை.

மேலும், சில கூடுதலான புதிய அப்டேட்கள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப்பில் அதிகப்படியான வாய்ஸ் மெசேஜ்கள் (Voice message) பகிரப்படுவது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டது. அதில், நண்பர்கள் அனுப்பும் வாய்ஸ் மெசேஜை ஸ்பீடு செய்து கேட்கும் வசதி வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தனர். அதன்படி, வாட்ஸ்அப் சாட் பாக்சில் நண்பர்கள் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருந்தால், அதனை வேகப்படுத்தி கேட்கும் அப்டேட்டும் கொடுக்கப்பட உள்ளது.


அதாவது, நண்பர்கள் சில வார்த்தைகளை மிகவும் மெதுவாக உச்சரித்து பேசுவார்கள் அல்லது அவர்களுடைய பேசும் வேகம் குறைவாக இருக்கும். அப்போது, நீண்ட நேரம் அமர்ந்து அவர்களின் பேச்சை கேட்க வேண்டியிருக்கும். அதற்கும் வாட்ஸ்அப் முற்றுப்புள்ளி வைக்க உள்ளது. நீங்கள் ரிசீவ் செய்யும் வாட்ஸ் ஆப் வாய்ஸ் மெசேஜை ஸ்பீடு செய்து (Fast Forward) கேட்டுக்கொள்ளலாம். இதன்மூலம் நண்பர்களின் வாய்ஸ் சாட்டை நீண்ட நேரம் கேட்டுக்கொண்டிருக்கும் நேரம் மிச்சமாகும்.

வாய்ஸ் மெசேஜை ஸ்பீடு செய்து கேட்கும் அப்டேட் தற்போது பீட்டா வெர்சனில் இருப்பதாகவும், விரைவில் ஆன்டிராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் தரத்துக்கு உயர்த்தி யூசர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளது. அண்மையில், வீடியோ மியூட் செய்யும் வசதியை வாட்ஸ் ஆப் வெளியிட்டிருந்தது. அதன்படி, தொடர்புகளில் இருப்பவர்களுக்கு அல்லது ஸ்டேட்டஸில் வீடியோவை அப்லோடு செய்வதற்கு முன்பு வீடியோவை மியூட் செய்துகொள்ள முடியும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments