கொேரானா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஆவுடையார்கோவிலில் முககவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு தலா ரூ.200 அபராதம்!



கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முககவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. ஆகவே, பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முககவசம் அணிந்து செல்ல வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினி மூலம் அடிக்கடி நன்றாக கழுவ வேண்டும் என்று தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அறிவுறுத்தி உள்ளது. முககவசம் அணியாமல் வெளியிடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ.200 அபராதமும் விதிக்கப்படுகிறது. 

அந்தவகையில், ஆவுடையார்கோவிலில் முககவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களை ஆவுடையார்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்குமார் நிறுத்தி தலா ரூ.200 அபராதம் விதித்ததுடன் முககவசம் வழங்கினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments