கட்டுமாவடியில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழப்புமணமேல்குடி அருகே உள்ள கட்டுமாவடி பகுதியை சேர்ந்தவர் சரியக்குட்டி (வயது 70). இவர் கட்டுமாவடி கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது கலக்கமங்கலம் பகுதியை சேர்ந்த சித்திரவேல் மகன் விஜய் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சரியக்குட்டி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விஜய் படுகாயமடைந்தார். 

இந்த விபத்து குறித்து மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments