திருச்சியில் நல் உள்ளங்கள் அறக்கட்டளை வழங்கும் விலையில்லா ஸஹர் உணவு.!திருச்சி விமான நிலையம் வரும் பயணிகள்  இரயில் பயணிகள் பேருந்து, கார் பயணிகள் , திருச்சி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் தங்கி உள்ளவர்களுக்கு இலவச சஹர் உணவு நல் உள்ளங்கள் அறக்கட்டளை (ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் ) சார்பில் ஏற்படாடு செய்யப்பட்டுள்ளது.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தொடர்பு எண்ணிற்கு  முன்பு பதிவு செய்து உணவைப் பெற்றுக் கொள்ளலாம்.

9790112105, 9952841510, 8072520962, 9786875108, 8667318020, 9842405150

முன்பதிவு நேரம்:
இரவு 8.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை

நீங்கள் இருக்கும் இடத்திற்கு நேரில் வந்து ஸஹர் உணவு வழங்கப்படும்.

அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சஹர் செய்யுங்கள். ஏனெனில், சஹர் செய்வதில் அருள்வளம் (பரக்கத்) உள்ளது. அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் பொருத்தம் நாடி மட்டுமே இச்சேவையானது செய்யப்படுகிறது. எனவே இப்பணி சிறக்க அனைவரும் துஆ செய்யுங்கள்.

பயணிகளின் நோன்பு!

பயணத்தின் போதும் நோன்பு நோற்க எனக்குச் சக்தி உள்ளது. எனவே (நோன்பு நோற்பது) குற்றமாகுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன்.

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அது அல்லாஹ்வின் சலுகையாகும். யார் அச்சலுகையைப் பயன்படுத்திக் கொள்கிறாரோ அது நல்லதே! யார் நோன்பு நோற்க விரும்புகிறாரோ அவர் மீது குற்றமில்லை என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஹம்ஸா பின் அம்ரு (ரலி) நூல்: முஸ்லிம் 1891

பயணத்தில் நோன்பை விட்டவர் வேறு நாட்களில் கணக்கிட்டு பிடிக்க வேண்டும் என்பதை கீழ்க்கண்ட வசனத்தின் மூலம் அறியலாம்.

'நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். (அல்குர்ஆன் 2:184)


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments