கந்தர்வகோட்டை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன்-சிறுமி உயிரிழப்பு
கந்தர்வகோட்டை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன்-சிறுமி பலியானார்கள். மேலும் 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சொக்கம்பட்டி கள்ளர் தெருவை சேர்ந்தவர் பஞ்சமூர்த்தி. இவரது மகன் விக்னேஷ் (வயது 8). அருகே  உள்ள பிலா விடுதியை சேர்ந்த உடையப்பன் மகள் கிரிஜா (11). இவள் கள்ளர்தெருவில் உள்ள பாட்டிவீட்டுக்கு வந்து இருந்தாள்.

இந்தநிலையில் நேற்று விக்னேஷ், கிரிஜா மற்றும் 4 சிறுவர், சிறுமிகள் அப்பகுதியில் அங்காள பரமேஸ்வரி கோவில் அருகில் உள்ள குளத்துக்கு குளிக்கச் சென்றனர். இவர்கள் குளத்தில் சற்றுதூரத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது, அவர்கள் 6 பேரும் சேற்றில் சிக்கி தவித்துக்கொண்டு இருந்தனர். 6 பேரும் சிறுவர்கள் என்பதால் சேற்றில் இருந்து தப்பிப்பது எப்படி என்று தெரியாமல் சத்தம்போட்டனர்.
 
இதைபார்த்த அந்த பகுதியில் நின்றவர்கள் குளத்தில் குதித்து 4 பேர்களை உயிருடன் மீட்டனர். ஆனால் விக்னேஷ், கிரிஜா ஆகியோர் சேற்றில் சிக்கி தண்ணீருக்குள் மூழ்கியதால் அதிக அளவில் தண்ணீர் குடித்து இருந்தனர். உடனடியாக இருவரும் வெள்ளாளவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். விக்னேஷ், கிரிஜா ஆகியோரை பரிசோதனை செய்த டாக்டர்கள்  அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனும், சிறுமியும் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் சொக்கம்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments