புதுக்கோட்டையில் டாம்ப்கால் நிறுவனத்தின் சார்பில் கபசுர குடிநீர் பொடிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்!



கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் புதுக்கோட்டை அரசு பழைய மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் டாம்ப்கால் நிறுவனத்தின் மூலம் அதிக அளவிலான கபசுர குடிநீர் பொடிகள் மற்றும் நிலவேம்பு கசாயத்திற்கான பொடிகள் தயாரிக்கப்பட்டு தமிழகத்தின் 19 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்திய மருத்துவத்துறை மற்றும் ஹோமியோபதித்துறை சார்பில் சென்னை ஆலந்தூரில் டாம்ப்கால் எனும் நிறுவனம் ஆயுஸ் முறைப்படி பாரம்பரிய சித்த மருந்துகளை தயாரிக்கும் பணிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக இதுநாள்வரை கபசுர குடிநீர் பொடிகள் நிலவேம்பு கசாய பொடிகள் மற்றும் சித்த மருத்துவம் சார்ந்த மாத்திரைகள் அங்கு தயாரிக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி புதுக்கோட்டை அரசு பழைய மருத்துவமனை வளாகத்தில் இந்திய மருத்துவத்துறை மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் சித்த மருந்துகளை தயாரிக்கும் நோக்கில் டாம்ப்கால் நிறுவனம் தொடங்கப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,இயக்குனர் கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர். கடந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய போது மக்கள் அனைவரும் சித்த மருந்தான கபசூர குடிநீரையே அதிகம் பயன்படுத்த தொடங்கினர்.

அதன் அடிப்படையிலேயே கூடுதலாக கபசுர பொடிகளை தயாரிக்கும் நோக்கில் புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் டாம்ப்கால் நிறுவனம் தொடங்கப்பட்டது.

புதுக்கோட்டை அரசு பழைய மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் டாம்ப்கால் மருந்து செய் நிலையத்தில் தமிழகத்திலேயே இரண்டாவது இடமாக தற்போது கொரோனா தடுப்பு மருந்தாக கபசுர குடிநீர் பொடி மற்றும் நிலவேம்பு கசாய தற்கான பொடி தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.இங்கு தயாரிக்கப்படும் கபசுர குடிநீர் பொடிகள் மற்றும் நிலவேம்பு கசாய பொடிகள் தமிழகத்தின் 19 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதற்கென டாம்ப்கால் நிறுவனம் சார்பில் ஓய்வு பெற்ற சித்த மருத்துவ அலுவலரான மோகன் என்பவரை சிறப்பு அதிகாரியாக நியமித்து அவரின் மேற்பார்வையில் 21 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தொடர்ந்து கபசுரக் குடிநீர் பொடிகளை தயாரித்து அதனை பாதுகாப்பான முறையில் பேக்கிங் செய்து 19 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் சென்னை ஆலந்தூருக்கு அடுத்தபடியாக புதுக்கோட்டையில் மட்டுமே தற்போது அரசு சார்பில் டாம்ப்கால் மூலம் இரண்டாவது இடமாக அதிக அளவிலான கபசுரக் குடிநீர் பொடிகள் மற்றும் நிலவேம்பு கசாய பொடிக்க தயாரிக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments