புதுக்கோட்டை: பைக்கில் சென்ற பெண் காவலரிடம் 7 சவரன் தங்க செயின் பறிப்பு : போலீஸ் வலைவீச்சு
பொன்னமராவதி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் காவலர் அணிந்திருந்த 7 சவரன் தங்க செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள குழிபிறைபட்டியைச் சேர்ந்தவர் சாருமதி (32). காரையூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் இவர், நேற்று மாலை ஆலவயலில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் குழிபிறைபட்டிக்கு திரும்பியுள்ளார்.


அப்போது, செம்பூதி என்ற இடத்தில் வரும்போது இவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த இருவர் அவரது கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க செயினை பறித்துள்ளனர். அப்போது சாருமதி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அந்த மர்மநபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் தங்க செயினை அறுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து பெண் காவலர் சாருமதி பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் காவலர் கழுத்தில் கிடந்த 7 சவரன் தங்க செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தொடர்ந்து காயமடைந்த சாருமதி பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments