முத்துக்குடா அருகே மின்கம்பத்தில் ஏறி பழுது பார்த்தபோது மின்சாரம் பாய்ந்து ஊழியர் உயிரிழப்பு



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள முத்துக்குடா கிராமத்தை சேர்ந்தவர் ராவுத்தர் (வயது 48). இவர் மின்சார வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் மீமிசல் அருகே உள்ள கொத்தல்லிகாடு கிராமத்தில் சரியாக மின்சாரம் கிடைக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அப்பகுதிக்கு சென்ற ராவுத்தர் மின்கம்பத்தில் ஏறி பழுது பார்த்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக ராவுத்தர் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மீமிசல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த போலீசார் ராவுத்தர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments