பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு திருப்பூருக்கு வேலைக்கு சென்ற அறந்தாங்கி பகுதியை சேர்ந்த 3 மாணவிகள் மீட்பு!அறந்தாங்கி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 3 மாணவிகள் நேற்று முன்தினம் பள்ளியில் சிறப்பு வகுப்பு இருப்பதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர்கள் மாலை வரையில் வீடு திரும்பவில்லை. பள்ளி நிர்வாகத்தை தொடப்பு கொண்டு கேட்டபோது பள்ளியில் சிறப்பு வகுப்பு ஏதும் இல்லை பள்ளி விடுமுறை என கூறியுள்ளனர்.
இதையடுத்து 3 மாணவிகளின் குடும்பத்தார் எங்கும் தேடியும் காணவில்லை. இதுகுறித்து அறந்தாங்கி போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஏற்கனவே திருப்பூரில் வேலை பார்த்துவிட்டு வந்த ஒரு மாணவியுடன் 3 மாணவிகளும் திருப்பூருக்கு வேலைக்கு சென்று உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து அறந்தாங்கி போலீசார் பால்ராஜ், தங்கராணி ஆகியோர் திருப்பூர் சென்று 3 மாணவிகளையும் மீட்டு அழைத்து வந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments