கம்ப்யூட்டர் உபகரணங்கள் தருவதாக கூறி ஆன்லைனில் மோசடி செய்த நபர்கள் மீது மீமிசல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அடுத்த ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்லா(24). இவர் மீமிசல் பகுதியில் ஆன்லைன் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்திற்கு பொது சேவை மையம் அமைப்பதற்கான கருவிகள் வாங்க டெல்லியை சேர்ந்த நிறுவனத்திடம் விண்ணப்பித்தார். அந்தப் பொருளை வாங்குவதற்காக கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை பல தவணைகளாக ரூ.40,800-ஐ அப்துல்லா ஆன்லைனில் கட்டியுள்ளார்.
அவர் பணம் கட்டிய சில நாட்களில் டெல்லியை சேர்ந்த அவருடன் பேசிய நபர்கள் அப்துல்லாவின் செல்போன் நம்பரை பிளாக் செய்துள்ளனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அப்துல்லா இதுகுறித்து மீமிசல் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் அப்துல்லாவை ஏமாற்றிய நபர்கள் மீது தகவல் தொழில் நுட்ப பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.