‘களமாவூா் மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும்: சு.திருநாவுக்கரசர் எம்.பி. வலியுறுத்தல்!



புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகிலுள்ள களமாவூா் ரயில்வே மேம்பாலத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று, திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. திருநாவுக்கரசா் கோரிக்கைவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

புதுக்கோட்டை- திருச்சி நெடுஞ்சாலையில் கீரனூா் அருகிலுள்ள களமாவூா் ரயில்வே மேம்பாலப் பணிகள் நீண்ட காலமாக தொய்வாகவே இருந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு நடத்தினேன்.

பாலப் பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டேன். அதன்பிறகு பாலத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. தற்போது மேம்பாலப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிட்டன.

பாலப்பணிகளின்போது அருகே அமைக்கப்பட்ட மாற்றுச் சாலை தற்போது மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

எனவே, முடிவுற்ற மேம்பாலத்தை விரைவில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சியரும், நெடுஞ்சாலைத் துறையினரும் அனுமதிக்க வேண்டும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments