பொன்பேத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள், செவிலியர்களுக்கான குடியிருப்புகளை சீரமைக்க கோரிக்கை



பொன்பேத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள், செவிலியர்களுக்கான குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆவுடையார்கோவில் அருகே பொன்பேத்தி கிராமத்தில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையம் 1967-ம் ஆண்டு அண்ணாதுரையால் திறக்கப்பட்டது. இதனை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.

இப்பகுதியை சேர்ந்த மக்கள் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் விவசாய கூலி வேலை செய்து வருவதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வசதியின்றி இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து தான் சிகிச்சை பெற்று செல்வார்கள்.

இங்கு டாக்டர்கள், செவிலியர்கள் தங்குவதற்காக சுகாதார நிலையம் கட்டப்பட்டபோதே குடியிருப்புகள் கட்டப்பட்டன. தற்போது, இந்த குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து பழுதடைந்து உள்ளது. இதனால் டாக்டர்கள் இங்கு தங்குவதில்லை. இதனால் அவசர தேவைகளுக்கு டாக்டர்கள், செவிலியர்களை அழைப்பதில் சிரமம் உள்ளது. எனவே இந்த கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments