அறந்தாங்கி, புதுக்கோட்டை, பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் இருந்து இரவு நேர கடைசி பேருந்துகள் புறப்படும் நேரங்கள் விபரம்!அறந்தாங்கி பஸ் நிலையத்திலிருந்து கீழ்கண்ட வழித்தடங்களுக்கு கடைசியாக பஸ்கள் கீழ்கண்ட நேரங்களில் இயக்கப்பட உள்ளது.

இதில் நகர பஸ்கள் இரவு 9 மணி வரை இயங்கும். புறநகர் பஸ்கள் காரைக்குடி இரவு 7.30 மணிக்கும், பட்டுக்கோட்டை இரவு 8.20 மணிக்கும், புதுக்கோட்டை இரவு 8.45 மணிக்கும், திருச்சி மாலை 5.30 மணிக்கும், மதுரை மாலை 5.20 மணிக்கும், பேராவூரணி இரவு 8.20 மணிக்கும், மீமிசல் இரவு 8.30 மணிக்கும், கட்டுமாவடி இரவு 9 மணிக்கும், கொத்தமங்கலம் இரவு 8.50 மணிக்கும் பஸ்கள் இயக்கப்படும்.

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து இரவில் கடைசியாக இயக்கப்படும் பஸ்கள் மற்றும் நேரம் விவரம் வருமாறு:- திருச்சிக்கு இரவு 8.30 மணிக்கும், தஞ்சாவூருக்கு இரவு 7.15 மணிக்கும், பட்டுக்கோட்டைக்கு இரவு 7.50 மணிக்கும், பொன்னமராவதிக்கு இரவு 9 மணிக்கும், மதுரைக்கு இரவு 7 மணிக்கும், காரைக்குடிக்கு இரவு 8.45 மணிக்கும், அறந்தாங்கிக்கு இரவு 9 மணிக்கும், மணப்பாறைக்கு இரவு 8 மணிக்கும், திண்டு்க்கல்லுக்கு மாலை 6.30 மணிக்கும் பஸ்கள் இயக்கப்படும். இரவு 9 மணிக்கு மேல் நகர பஸ்கள் இயக்கப்படாது.

பொன்னமராவதி பஸ் நிலையத்திலிருந்து கீழ்கண்ட வழித்தடங்களுக்கு கடைசியாக பஸ்கள் கீழ்கண்ட நேரங்களில் இயக்கப்பட உள்ளது. இதில் நகரப் பஸ்கள் இரவு 9 மணி வரை இயங்கும். புறநகர் பஸ்கள் திருச்சி இரவு 7.30 மணிக்கும், மதுரை மாலை 5.50 மணிக்கும், திருப்பத்தூர் இரவு 8.15 மணிக்கும், புதுக்கோட்டை இரவு 8.40 மணிக்கும், துவரங்குறிச்சி இரவு 8 மணிக்கும், சிங்கம்புணரி இரவு 8.15 மணிக்கும், கீழச்சீவல்பட்டி இரவு 8.10 மணிக்கும், மேலத்தானியம் இரவு 8 மணிக்கும் பஸ்கள் இயக்கப்படும். 

கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் நலனுக்காக அரசால் செயல்படுத்தப்படும் இவ்வித நடவடிக்கைகளுக்கு பயணிகள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டல பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments