தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்




தொலைதூர பயணம் மேற்கொள்ளும்போது, கொரோனா இரவு ஊரடங்கு காரணமாக நீங்கள் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை வழியில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் கவனிக்க வேண்டியவை என்னென்ன? - இதோ ஓர் எளிய வழிகாட்டுதல்...

 
1. தனிமையான பகுதிகளில் வாகனங்களை நிறுத்தாமல் காவல் நிலையம், ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அல்லது மருத்துவமனை போன்ற பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி ஓய்வு எடுப்பது நல்லது.

2. கார் கண்ணாடி, கதவுகளை முழுவதுமாக திறந்துவைத்து தூங்க வேண்டாம்.

3. வாகனத்தின் என்ஜினை ஆன் செய்துவைத்து விட்டு உறங்கக் கூடாது.

4. கார் ஏசியை முழுநேரமும் இயக்க வைத்தாவாறு இருக்கக் கூடாது.

5. அவசர கால பயன்பாட்டிற்கு அரசு வழங்கியுள்ள தொடர்பு எண்களை பயன்படுத்த வேண்டும்.


6. முன்பின் தெரியாத அல்லது சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து காவல்துறைக்கு உடனடியாக புகார் தெரிவிக்கவும்.

மிக மிக அவசியமான சூழலைத் தவிர்த்து, வேறெந்த காரணத்தைக் கொண்டும் இரவு நேரத்தை உள்ளடக்கிய தொலைதூரப் பயணத்தை கொரோனா பேரிடர் காலத்தில் திட்டமிடாமல் இருப்பதே நல்லது. வெறு வழியில்லாத சூழல் ஏற்பட்டால், தொலைதூரப் பயணத்தின்போது இரவு ஊரடங்கு நேரத்தை அணுகும்போது மேற்கண்ட வழிகாட்டுதலைப் பின்பற்றத் தவறாதீர்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments